×

வார்டு பொறுப்பு குழு அமைப்பது குறித்த திமுக ஆலோசனை கூட்டம்

ஓசூர், அக்.24:  ஓசூரில் நகர திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலின் வார்டு பொறுப்பு குழு அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஓசூரில்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக  வரையறுக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் கட்சியினர் செயல்படுவது குறித்த ஆலோசனை  கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தளி  பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்து,  உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக  வரையறுக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் கழக அமைப்பு செயல்பட வார்டு  பொறுப்புகுழு உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்வது குறித்து பேசினார். கூட்டத்தில், ஒவ்வொரு வார்டிற்கான 10 பேர் கொண்ட  பொறுப்பு குழு அந்தந்த பகுதியில் நகர, பேரூர், வட்ட  நிர்வாகிகள் தயார் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில் வேப்பனஹள்ளி முருகன் எம்எல்ஏ, ஓசூர் சத்யா  எம்எல்ஏ,  மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தனலட்சுமி, சுகுமாறன், சின்னபில்லப்பா,  செந்தில்குமார், சீனிவாசன், கோபி, ஞானசேகரன், சேகர், நிசார், ராமு, சக்திவேல், முருகேசன், சூரி, மாணிக்கவாசகம், அரசனட்டி ரவி,  சீனிவாசன், ஜெய்ஆனந்த், கருணாநிதி, நாகராஜ், திம்மராஜ், சாந்தி, சென்னீரப்பா,  ஸ்ரீதர்சிங், ஆனந்தய்யா, சுனந்தா, தனலட்சுமி பார்த்திபன், தேன்கனிக்கோட்டை சீனிவாசன், ஸ்ரீதர், மோகன், மணிவண்ணன்,  கெலமங்கலம் குமார், சுமன், சுரேஷ், ஹரிபிரசாத், வடிவேல், தீனதயாளன், சுரேஷ், மதுக்கரை ராமசந்திரன்,  குணசேகரன், கிருஷ்ணன், மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK Advisory Group ,Ward Accountability Committee ,
× RELATED மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்: 14 பேர் கைது