×

வேப்பனஹள்ளியில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை தண்டோரா போட்டு அறிவிப்பு

வேப்பனஹள்ளி, அக்.24:  வேப்பனஹள்ளியில் தீபாவளியையொட்டி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், கடைகளில் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நேற்று வேப்பனஹள்ளியில் தண்டோரா மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டது. விதிகளை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Veppanahalli ,
× RELATED எச்சிலுக்கு தடை... வியர்வை ஓகே!: ஐசிசி குழு பரிந்துரை