×

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, அக்.24:  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. இம்முகாமில் விருப்பமுள்ள வேலையளிப்பவர்களும், வேலைநாடுநர்களும் கலந்துகொள்ளலாம். நாளை (25ம்தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் பங்கேற்கலாம். இத்தகுதியுடைய பணிநாடுநர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் அனைத்து கல்வி சான்றுகளின் நகல்களுடன், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : employment camp ,Krishnagiri ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்