×

ஓய்வூதியர் குறை தீர் கூட்டம்

தர்மபுரி, அக்.24: தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், வரும் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் மலர்விழி தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குனரால் வரும் நவம்பர் 20ம் தேதி காலை 10.30 மணியளவில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்கள், ஓய்வூதியம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகளில் வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pensioners Compensation Meeting ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்