×

தர்மபுரி அரசு மருத்துவமனையில் நாய் தொல்லையால் நோயாளிகள் அச்சம்

தர்மபுரி, அக்.24: தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் நாய்களால் நோயாளிகள் அச்சப்பட்ட வருகின்றனர்.தர்மபுரி அரசு மருத்துவமனையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் புற நோயாளிகளும், ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் நோயாளிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் குப்பை தொட்டியில் போடும் கழிவுகளை தின்று விட்டு, மருத்துவமனை வளாகத்தையே சுற்றி வருகின்றன. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை விரட்டி கடிக்க முயல்கின்றன. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை, அரசு மருத்துவமனை வளாகத்தில் கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் பெரிதும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dharmapuri Government Hospital ,
× RELATED தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய்...