×

கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து

காரிமங்கலம், அக்.24: கடத்தூர் அருகே பெரியாம்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தலில் திமுகவை சேர்ந்த நடராஜன், குமரேசன், வசந்தா நடராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இயக்குநர்களாக பதிவி ஏற்றுக் கொண்ட 3பேரும், தர்மபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர். மூவரையும் எம்எல்ஏ வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் தனபால், ஊராட்சி செயலாளர்கள் ராமசந்திரன், அண்ணாமலை, சிங்காரவேல், ராமகிருஷ்ணன், சக்திவேல், சண்முகம், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : District Secretary ,election ,
× RELATED மருத்துவ படிப்பிற்கு தேர்வான தறித்தொழிலாளி மகள் முதல்வரிடம் வாழ்த்து