×

அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் அனுசரிப்பு

கந்தர்வகோட்டை, அக்.24: உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அறந்தாங்கி டாக்டர் கலைவாணி தலைமை வகித்து மாணவ, மாணவிகளிடம் அயோடின் பற்றாக்குறை குறைவினால் ஏற்படும் பாதிப்பு, கர்ப்பிணி பெண்கள் ஏன் அயோடின் உப்பு பயன்படுத்த வேண்டும், அயோடின் சத்து கடல்வாழ் உயிரினங்கள் சாப்பிடுவதால் எவ்வாறு கிடைக்கும். அதை எவ்வாறு சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என விளக்கினார்.
சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் அயோடின் உப்பு பரிசோதனை செய்து காண்பித்தார். மருத்துவர் சசிவர்மன் டெங்கு காய்ச்சல் பரவாவண்ணம் தடுக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கினார். மருத்துவர் விண்ணரசி கைகழுவும் முறை தன்சுத்தம் எவ்வாறு பேணுவது முக்கியம் என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சந்தோஷ் மாணவ, மாணவிகளுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

Tags : Iodine Deficiency Prevention ,
× RELATED பாடந்துறை அங்கன்வாடியில் உலக அயோடின்...