×

விராலிமலை அருகே லாரி மீது பைக் மோதி விபத்து ஓட்டல் உரிமையாளர் பலி

விராலிமலை, அக்.24: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் செந்தில்குமார்(39). இவர் விராலிமலை மதுரை சாலையில் உள்ள கோவில்பட்டியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கோவில்பட்டியில் இருந்து பைக்கில் விராலிமலைக்கு வந்தார். கொடும்பாளூர் சத்திரம் அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் லாரி டிரைவர் கரூரைச் சேர்ந்த கந்தசாமி(42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Bike owner ,Viralimalai ,
× RELATED திருச்சி அருகே லாரி மீது கார் மோதிய...