×

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.24: புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்தி குறிப்பிவ் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (24ம் தேதி) புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரிவு ஐ.டி.ஐ (எலக்ட்ரிசியன் தவிர), மற்றும் டிப்ளமோ (சிவில் தவிர) 2015 முதல் 2019 கல்வியாண்டில் தங்கள் கல்வியினை முடித்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...