×

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் பட்டியலில் திருத்தம்

வேலூர், அக்.24: அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்து உடனடியாக அனுப்பி வைக்கும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்க 01.01.2019 நிலவரப்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் தவறுகள் உள்ளதாகவும், பலரது முன்னுரிமை விடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இப்பட்டியலில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் பெயர் சேர்க்கை, திருத்தம், நீக்கம் போன்ற மேல்முறையீடுகள் ஏதாவது இருந்தால் உரிய ஆவணங்களுடன் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு பள்ளியினை சேர்ந்த பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியலை அந்தந்த பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களின் பார்வைக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்று அதற்கான சான்றை பள்ளியில் பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : teachers ,Secondary School Headmasters ,Government High ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...