×

தனியார் துப்புரவு பெண் ஊழியர் மர்மச்சாவு கல்லூரி வாசலில் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

காவேரிப்பாக்கம், அக்.24: காவேரிப்பாக்கம் அருகே தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த துப்புரவு பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் நிவாரணம் வழங்கக்கோரி கல்லூரி வாசலில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(55). ஓச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஹாஸ்டலில் இரவு துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் லோகநாதன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாடி படியில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதனால் மருமகள் கோடீஸ்வரி(30) மற்றும் பேரப்பிள்ளைகள் செல்வா(13), காயத்ரி (11), ஆகியோருடன் மாமண்டூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி மாலை தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற சரஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர், மாமண்டூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான மருந்து குடோன் அருகே மர்மமான முறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சரஸ்வதியின் மகள் கலா நேற்றுமுன்தினம் மாலை அவளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மாமண்டூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் உறவினர்கள், சரஸ்வதி சாவில் சந்தேகம் உள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வாசலில் சடலத்தை வைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் நிவாரண தொகை வழங்குவதாக கூறியதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ெபரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Relatives ,Marmachau College ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...