×

வேளாண் சட்டங்களை கண்டித்து 27ல் பந்த்: சாலை, ரயில் மறியல் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு..!

பெரம்பலூர்: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முழு ஆதரவு அளிப்பது என்றும் அன்று சாலை, ரயில் மறியலில் ஈடுபடுவது என்றும் பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்  நடைபெற்றது. மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் பெருமாள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாநில செயலாளர் சாமி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்திட இந்திய ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் வகையில், வருகிற 27ம்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக முழு ஆதரவை அளிப்பது. பந்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசிற்கு எதிராக சாலை, ரயில் மறியல் போராட்டங்களை நடத்துவது. 2020-2021ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடுகள் வழங்க கோருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது….

The post வேளாண் சட்டங்களை கண்டித்து 27ல் பந்த்: சாலை, ரயில் மறியல் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு..! appeared first on Dinakaran.

Tags : Bandh ,Farmers Union ,Perambalur ,Bharat ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...