×

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை கைவிட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

தக்கலை, அக். 24:  ஆயுள் இன்சூரன்ஸ் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் பரவலையும், சமூக பாதுகாப்பையும் பாதிக்கும் எனவும், சமூக பாதுகாப்பு, தேச நிர்மானம், பாலிசி தாரர் நலன் கருதி ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும் என காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் முக்கிய பிரமுகர்கள், சமூக நல அமைப்புகள், அரசியல் இயக்கங்களிடம் கையெழுத்திட்ட மனு பெறப்பட்டது. இதனை ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினரான அமைச்சர் ஜெயக்குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  நகர தொழில் வணிகர் சங்கம், தக்கலை வட்டார மார்க்சிஸ்ட் கட்சி, குமரி மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கம், முன்னாள் கவுன்சிலர்கள், முகவர்கள் உள்ளிட்டவர்களிடம் கையெழுத்திட்ட மனுக்களை காப்பீட்டு கழக ஊழியர் சங்க தக்கலை கிளை பொறுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் லாரி...