பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீயணைப்புத்துறை செயல்முறை விளக்கம்

நாகர்கோவில், அக்.24:  பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்பு துறையினர் நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் விளக்கம் அளித்தனர். நாகர்கோவில், கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும். ஒலி மாசு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது தொடர்பாக செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணகுமார் அறிவுரையின்பேரில், உதவி தீயணைப்பு அதிகாரி கார்த்திகேயன், நிலைய அலுவலர் துரை ஆகியோர் மாணவ, மாணவிகள் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், ேமற்ெகாள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். ேமலும் விபத்து ஏற்படாமல் எவ்வாறு பட்டாசு வெடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம்...