×

மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை முதல் கோடம்பாக்கம் பகுதியில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்.!

சென்னை: மெட்ரோ ரயில் பணி  காரணமாக கோடம்பாக்கம் பகுதியில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை  அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில்  2ம் கட்டப்பணி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல், ஆற்காடு  சாலை 80 அடிசாலை சந்திப்புவரை நடைபெறவிருப்பதால், போக்குவரத்து மாற்றம்  செய்யப்படவுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை (14ம் தேதி) முதல்  ஓராண்டிற்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூர் மார்க்கத்திலிருந்து  கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து  மாற்றம் எதுவுமில்லை. கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர்  சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ்  சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர்  காவல் நிலையம் வரைசென்று, வலது புறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை வழியாக,  100 அடிசாலை சந்திப்புவரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார்  சாலை, 80 அடிசாலை வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம்.  கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து, வடபழனி சந்திப்பு நோக்கி, ஆற்காடு  சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடதுபுறம்  திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரைசென்று,  வலதுபுறம் திரும்பி, 2வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று,  வடபழனி சந்திப்பு செல்லலாம். வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில்  செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக  பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம்  சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.  அசோக் பில்லரிலிருந்து,  கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில்,  அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, 2வது  அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலைவழியாக செல்லலாம். ஆற்காடு சாலை  துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும்  வாகனங்கள், வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ்  சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள்  செல்ல அனுமதியில்லை (ஒரு வழி பாதை). வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2வது  அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து, 2வது அவென்யூ சாலை 100 அடிசாலை  சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2வது அவென்யூ சாலை 100  அடிசாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2வது அவென்யூ சாலை  சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழிபாதை). வாகனங்கள் அம்பேத்கர்  சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு  நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் காவல் நிலையம்  சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை(ஒருவழிப் பாதை). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக நாளை முதல் கோடம்பாக்கம் பகுதியில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்.! appeared first on Dinakaran.

Tags : Metro Railway ,Gotambakkam ,Chennai ,Chennai Transport Guild ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?