×

‘தீபாவளி பர்சேஸூக்கு’ வரும் வாகனங்களால் பஸ்நிலையம் முன் போக்குவரத்து நெரிசல்

சிவகாசி, அக். 23:   சிவகாசி பஸ்நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முழுமையாக முடியாததால் பஸ்நிலையத்தின் உள்ளே கடும் இடநெருக்கடி ஏற்படுகிறது. பஸ்கள் உள்ளே வந்து செல்வதிலும் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற சமயங்களில் பஸ்நிலையம் முன்பு உள்ள சாலையில் பஸ்கள் நீண்ட நேரம் நின்று பின், பஸ்நிலையத்தின் உள்ளே வருகிறது. இந்த சமயங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பஸ்நிலையம் முன்புள்ள தனியார் வணிக வளாகம் முன்பு சாலையில் டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், தீபாவளிக்கு சிவகாசியில் பட்டாசு வாங்க வெளியூர் நபர்கள்  ஏராளமானோர் காரில் வருகின்றனர். இதனால், பஸ்நிலையம் எதிரே கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகரில் பஸ்நிலையம் எதிரில் உள்ள வணிக வாளாகங்கள் முன்பு டூவீலர்களை நிறுத்த தடை விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags : bus stand ,
× RELATED கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில்...