×

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

திருவில்லிபுத்தூர், அக். 23:  திருவில்லிபுத்தூரில் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகராட்சி சார்பில், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம், பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, டவுன் ரோட்டரி சங்க தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகராஜ் வரவேற்றார். திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி, நகராட்சி கமிஷனர் சுப்பையா ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தனர். டவுன் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நந்தகோபால், முத்துராமலிங்க குமார், ஜெகநாதன், கண்ணன், முகவை ராமர் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : camp ,
× RELATED தென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை