×

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி ராஜபாளையம் மாணவிகள் வெற்றி

ராஜபாளையம், அக். 23:  மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். ராஜபாளையத்தில் 17 வயது மாணவிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இறுதி போட்டியில் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியும், விருதுநகர் சத்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், விருதுநகர் அணியை 23-25, 25-14, 25-21 என்ற புள்ளி கணக்கில் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வென்றது. வெற்றி பெற்ற ராஜபாளையம் அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கைப்பந்து கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags : District level volleyball tournament winners ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு