×

வத்திராயிருப்பில் பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள முத்தாலம்மன் கோயில் தேர்

வத்திராயிருப்பு, அக். 23:  வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி, கடந்த 1ம் தேதி வடக்குவாசல் செல்லாயி அம்மன் மதுப்பொங்கல் கடந்த 8ம் தேதி முத்தாலம்மன் மதுப்பொங்கல் நடைபெற்றது. கடந்த 9ம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் நாதசுர கச்சோி, பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சி பாட்டுக்கச்சோி கிராமியக்கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 16ம் தேதி முத்தாலம்மன் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் தேர் முத்தாலம்மன் திடல் பகுதியில் பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் தேரில் உள்ள சிற்பங்கள் சிதிலமடைய வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போது தேர் நிறுத்தியிருக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே, தேரை பாதுகாப்பாக தேர்நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muttalamman Temple ,
× RELATED அக்.20ம் தேதி நடக்கிறது வாகைகுளம்...