×

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் அச்சிடும் தொழில்நுட்ப பயிற்சி

ராஜபாளையம், அக். 23:  ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் முப்பரிமாண (3டி) அச்சிடும் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வு கோவை மெட்ஸ்பி ஹெல்த்கேர் மற்றும் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பயிற்சி பட்டறையினை ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் ராஜகருனாகரன் தொடங்கி வைத்தார். இதில், ராம்கோ கல்லூரியைச் சேர்ந்த 79 மாணவர்களுக்கு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை மெட்ஸ்பி ஹெல்த்கேர் மற்றும் இன்ஜினியரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவருமான குரு பிரசாந்த் வழங்கினார். நிகழ்ச்சி மூன்றாம் நாள் இறுதியில், 2019 டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தின் புதுமை கண்டுபிடிப்பு போட்டிக்கான பேனர் வெளியீடு நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வின்போது கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன், துணைமுதல்வர் முனைவர் ராஜகருனாகரன், கல்லூரியின் துணைபொது மேலாளர் செல்வராஜ் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் ஜெரால்டு ஜான் பிரிட்டோ மற்றும் ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags : Ramco Technical College ,
× RELATED ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா