×

பொது சுவரை இடித்த விவகாரம் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு ஐகோர்ட்டில் தகவல்

மதுரை, அக். 23: பொது சுவரை இடித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்ததாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே, பெரியபுளியம்பட்டியைச் சேர்ந்த ராஜா (65), ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 80 வயதான எனது பாட்டியை கட்டில் படுக்கையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். பக்கத்து வீட்டில் அந்தோணி என்பவர் குடியிருக்கிறார். இரு வீட்டிற்கும் இடையில் பொதுச்சுவர் உள்ளது. எனது வீடு பழமையானது. கடந்தாண்டு அந்தோணி பொதுச்சுவரை சுத்தியலால் இடித்தார். இதனால், அதிர்வு ஏற்பட்டு எனது வீட்டின் ேமற்கூரை இடிந்து பாட்டியின் மீது விழுந்தது. இதில், பாட்டி பலத்த காயமடைந்தார். இது குறித்து கேட்டபோது வீட்டை காலி செய்யுமாறு மிரட்டினார். இது குறித்து அருப்புக்கோட்டை போலீசில் புகார் அளித்தேன். என் மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, வழக்குப்பதிவு செய்யக்கோரி அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தேன். என் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு என் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, அதன் நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து ெகாண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.

Tags : court ,demolition ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...