×

நீர்மட்டம் உயர்கிறது கொள்ளையர் 2 பேர் கைது கப்பைகளை பிடுங்கி மீண்டும் துவம்சம் தேனியில் டெங்கு கொசு ஒழிப்பில் சிக்கல்

தேனி, அக். 23: தேனி மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பெரும்பாலான வீடுகளில் உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதனால் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சிகளில் மக்கள் தொகை கணக்குப்படி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளுக்குள் சென்று சமையலறையில் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், பிரிட்ஜ் பின்புறம் உள்ள நீர் தேங்கும் இடங்கள், பாத்ரூம்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பக்கெட்டுகளில் கொசுப்புழு உள்ளதா என பார்க்கின்றனர். பெரிய வீடுகளில் தண்ணீர் பிடித்து வைக்கும் தரைமட்ட தொட்டிகளையும் பார்க்கின்றனர். டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தால் அதற்குள் மருந்து ஊற்றி அதனை அழித்து விடுகின்றனர். அந்த தண்ணீரை கீழே தான் கொட்ட வேண்டும். பயன்படுத்தவே முடியாது.
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் இப்படி கறாராக பணியாற்றினால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். எனவே இப்படித்தான் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என இவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் இந்த கறார் நடவடிக்கைகளை பலர் ஏற்றுக்கொண்டாலும், சிலர் ஏற்க மறுக்கின்றனர். டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை வீட்டிற்குள் விடவே மறுக்கின்றனர். இதனால் அந்த வீடுகளின் நிலை என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. இதனால் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் இது போன்ற சிலரால் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் கூட தங்கள் வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நுழைய அனுமதிப்பதில்லை. அரசு சொல்வதை அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களே கேட்காவிட்டால், சாதாரண பொதுமக்களை எப்படி குறைசொல்ல முடியும் என டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : dengue mosquitoes ,robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...