×

லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

தேவதானப்பட்டி, அக். 23: திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் டிரைவர் செல்லப்பாண்டி (45). இவர் சொந்தமாக லாரி வைத்து டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் தேவதானப்பட்டியில் தென்னை மட்டைகளை லாரியில் ஏற்றி புறவழிச்சாலையில் செல்லும்போது சில்வார்பட்டி பிரிவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இதில் செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியில் உடன் வந்த அவரது மனைவி முத்துலட்சுமி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED லாரி கவிழ்ந்து டிரைவர் பலி