×

டிராக்டரை திருடி கொலை மிரட்டல் கோர்ட் உத்தரவால் வழக்கு

குஜிலியம்பாறை, அக். 23: குஜிலியம்பாறை அருகே டிராக்டரை திருடி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது கோர்ட் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை அருகே உல்லியக்கோட்டை முத்துக்கருப்பனூரை சேர்ந்தவர் மதி (33). விவசாயி. இவர் கடந்த ஏப்.25ம் தேதி பொன்னிகுளத்தில் டிராக்டரை நிறுத்தி வைத்து பக்கத்தில் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டிராக்டரை காணவில்லை. சுற்றியுள்ள பகுதி முழுவதும் தேடிய நிலையில் டிராக்டர் சுப்பிரமணியபிள்ளையூரை சேர்ந்த தனுஷ் (34) என்பவரது தோட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையறிந்து மதி டிராக்டரை எடுக்க சென்றுள்ளார். அப்போது தனுஷ் தகாத வார்த்தைகளால் பேசி மதிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மதி வேடசந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தனுஷ் மீது டிராக்டரை திருடி சென்றது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் குஜிலியம்பாறை போலீசார் தனுஷ் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

Tags :
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம்...