×

விவசாய பரப்பு அதிகரிக்க வாய்ப்பு பள்ளி மாணவர்கள் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை காட்டும் போலீசார்

தேனி, அக். 23: தேனியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால், பெரியகுளம், மதுரை ரோட்டோரங்களில் உள்ள பள்ளிகளுக்கு ரோட்டை கடந்து செல்லும் மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தேனியில் மதுரை, கம்பம், பெரியகுளம் ரோட்டோரம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பாதைகள் அனைத்துமே இருவழிப்பாதைகள். தவிர போக்குவரத்து நெரிசல் மிக, மிக கடுமையாக உள்ளது. தற்போது தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்களால் நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்த நெரிசலை கடந்து பள்ளிக்குள் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பெரியகுளம் ரோட்டில் இரண்டு இடங்களிலும், மதுரை ரோட்டில் ஒரு இடத்திலும், கம்பம் ரோட்டில் ஒரு இடத்திலும் தலா இரண்டு போலீசார் நின்று கொண்டு மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்க வசதியாக வாகனங்களை ரோட்டின் இருபுறமும் ஒரே நேரத்தில் நிறுத்தி, நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைக்கின்றனர்.காலை பள்ளி தொடங்கும் நேரம், மதியம் இடைவேளை நேரம், மாலை பள்ளி முடியும் நேரம் என மூன்று நேரங்களிலும் போலீசார் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து போலீஸ் பிரிவில் போதுமான போலீசார் இல்லாததால், மாவட்ட எஸ்.பி., ஆயுதப்படையில் இருந்து சில போலீசாரை இப்பணிக்கு அனுப்பி உள்ளதாகவும், தவிர தீபாவளி நெரிசலை பயன்படுத்தி யாரும் பொதுமக்களிடம் திருடாத வகையில், ஆண், பெண் போலீசார் சாதாரண உடைகளில் நகர் முழுவதும், வலம் வருவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Tags : schoolchildren ,spread ,
× RELATED ஸ்ரீநகரில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..!!