×

பெரியாறு கால்வாயில் நீர் திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை, அக். 23: சிவகங்கை மாவட்டத்திற்கு பெரியாறு கால்வாயில் நீர் திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன பகுதியாக உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த ஆண்டு ஆக.29 முதல் பெரியாறு நீர் இரு போக சாகுபடிக்கு திறக்கப்பட்டது. அக்.9 முதல் ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 130 கன அடி நீர் திறக்கப்பட்டது.இந்த நீர் மதுரை மாவட்ட அனைத்து கால்வாய்களிலும் திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படவில்லை. இதையடுத்து சிவகங்கை மாவட்தத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி நேற்று சிவகங்கை அருகே சோழபுரத்தில் பெரியாறு பாசன விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சிவகங்கை தாசில்தார் மைலாவதி, மேலூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டாஸ்யூஸ் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு, சீல்டு கால்வாய் ஆகியவ்றறில் உடன்டியாக நீர் திறப்பது எனறும், மற்ற கால்வாய்களில் திறப்பது குறித்து இன்று (அக்.23) சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடத்துவது எனவும் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : canal ,
× RELATED சோதனையில் தப்பிக்கும் வாகன ஓட்டிகளை...