×

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

கமுதி, அக். 23: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்நது. பள்ளியின் செயலர் சிவமுருகன் ஆலோசனையின் படி, தலைமையாசிரியர் முத்துமுருகன் தலைமை தாங்கி இந்த ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோதினி முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப் படை, இளஞ் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், நுகர்வோர் மன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு, அனைத்து தெருக்களிலும் குழுவாக பிரிந்து சென்று, வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்