×

மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

பாபநாசம், அக். 23: பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு கசாயத்தை உறுப்பினர்கள் இதில் தலைவர் சுப்பு.தங்கராசு, செயலாளர் துரைசாமி, பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பாபநாசம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வடக்கு மகேந்திரன்,  பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சரபோஜிராஜபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கபிஸ்தலம், அலவந்திபுரம், கூனஞ்சேரி பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்