×

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பயனாளிகள் தேர்வு பயிற்சி முகாம்

பாபநாசம், அக். 23: பாபநாசம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி பாபநாசம் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது. வேளாண்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்ட கலைத்துறை இணைந்து பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடந்தது.பாபநாசம் வேளாண்மை உதவி அலுவலர் மோகன் உள்ளிட்ட வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Beneficiary Selection Training Camp ,
× RELATED ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பயனாளிகள் தேர்வு பயிற்சி முகாம்