×

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் சதுர்கால பைரவருக்கு அஷ்டமி பூஜை

கும்பகோணம், அக். 23: கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சதுர்காலபைரவருக்கு  சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது.பின்னர் பைரவர் சுவாமிக்கு வெள்ளி கவசம், வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர். பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ashtami Pooja ,Satarakal Bhairavar ,Saptariswarar Temple ,
× RELATED ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி...