×

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

தஞ்சை, அக். 23: வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதானல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.பொதுமக்கள் நலனுக்கு எதிரான வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட  வேண்டும். பெரும் முதலாளிகள் பெற்ற கடன்கள் வாராக்கடன் பட்டியலில் உள்ளதை  வசூலிக்க வேண்டும். பணியாளர்களின் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 275 வங்கி கிளைகளிலும் பணியாற்றும் 1,300க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தஞ்சை தெற்கு வீதி இந்தியன் வங்கி முன் அகில இந்திய ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர் சங்க தலைவர்கள் சுப்பிரமணியம், ரவி, கண்ணம்மா, செந்தில், வெங்கட், ராஜலிங்கம், கவிதா, மகேஸ்வரி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கும்பகோணம்: கும்பகோணத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கும்பகோணம் நகர வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகி ராகவன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bank employees ,customers ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...