×

ஓசூரில் சாரல் மழை; வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

ஓசூர், அக்.23: ஓசூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக ஓசூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஓசூர், ஜூஜூவாடி, பாகலூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாததால், வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துடன் கல்லூரிக்கு சென்று வந்தனர்.  தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : homes ,Hosur ,
× RELATED தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக...