×

தேன்கனிக்கோட்டையில் சிறுமலர் ஆலய தேர்த்திருவிழா

தேன்கனிக்கோட்டை, அக். 23: தேன்கனிக்கோட்டையில் உள்ள புனித சிறுமலர் ஆலயம் 45ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர  திருவிழா மற்றும் திருப்பலி நடைபெற்றது. பங்குதந்தை மரியஜோசப் தலைமையில் புனித குழந்தை தெரசம்மாவின் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி வானவேடிக்கையுடன் நடந்தது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தில் அருட்கன்னியர்கள், பங்குபேரவை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிறுமலர் ஆலய பங்குபேரவை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Tags : temple festival ,
× RELATED சோளிங்கர் கோயில் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி