×

சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாதாள சாக்கடை, தண்ணீர் தொட்டி ஆகியவற்றை சுத்தப்படுத்தும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பது தற்போது தொடர்கதையாகி வருகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் கால்வாய், தண்ணீர் தொட்டி உள்ளிட்டவற்றில் இறங்கி பலர் உயிரை விடுகின்றனர். இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியாகினர். நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த பாலு என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆட்கள் தேவைப்படுவதாக கூறி ராஜ்பாபு என்பவரை அணுகினர். இதனை அடுத்து முத்துகிருஷ்ணன், திப்பு சுல்தான் ஆகிய 2 பேரை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக ராஜ்பாபு அனுப்பி வைத்திருக்கின்றார். பாலுவின் வீட்டிற்கு சென்று தண்ணீர் தொட்டியை திறந்த போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். 2 பேரின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாலு மற்றும் ராஜ்பாபு ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டின் உரிமையாளர் பாலு மற்றும் ராஜ்பாபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்….

The post சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai kiln ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...