×

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரி, அக்.23: கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நல அமைப்பின் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். செயலாளர் முனிரத்தினம் துவக்கவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடித்திட வேண்டும். 3 சதவீதம் வரை வைர விழா சலுகை பெற்றிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை களைந்து, மின்வாரியமே ஏற்று நடத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி பணிக்காலத்தை இணைத்து ஓய்வூதியம் திருத்தம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு மின்சார வாரிய மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் கருணாநிதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, சிஐடியூ மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், முன்னாள் தலைவர் மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இணை செயலாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.

Tags : Electricity pensioners ,Krishnagiri ,
× RELATED மாவட்ட தலைநகரானாலும் தத்தளிக்கும் கிருஷ்ணகிரி