×

பைக் திருட்டு

ஜெயங்கொண்டம், அக். 23: ஜெயங்கொண்டம் அருகே ஹோட்டல் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது.தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே தில்லைஸ்தலம் வடக்கு தெருவை சேர்ந்த ரங்கராஜ் மகன் அரவிந்த் (24). இவர் திருமணத்துக்காக பெண் குடும்பம் குறித்து விசாரிப்பதற்கு மீன்சுருட்டி பகுதிக்கு நேற்று தனது பைக்கில் சென்றார். பின்னர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் கடைத்தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் முன் பைக்கை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அருகில் உள்ள பகுதியில் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசில் அரவிந்த் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து பைக்கை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்.

Tags :
× RELATED வழிப்பறி, நகை பறிப்பு, பைக் திருட்டா? வழக்குப்பதியாமல் போலீசார் மெத்தனம்