×

உயர், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

ஜெயங்கொண்டம், அக். 23: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடை  பயிற்சி, மாடர்ன் கல்வியியல் கல்லூரியில் நடந்தது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலாஜி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாத்தி, நீலமேகம் முன்னிலை வைத்தனர். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜா  பயிற்சியை துவக்கி வைத்தார்.பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்பரசன், மோகன், தாமோதரன், மதியழகன் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் பார்த்திபன் ஆகியோர் செயல்பட்டனர்.

பயிற்சியில் தலைமை பண்பு, போக்சோ சட்டம், பாடப்புத்தகத்தில் உள்ள கலைத்திட்டம், பள்ளி சார்ந்த மதிப்பீடு, மாணவர்களிடையே நல்லொழுக்கம், சுகாதார நலவாழ்வு வளர்த்தல், பள்ளி கல்வியில் புதுமுயற்சி, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் கற்பிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் அரிசெல்வராசு மற்றும் உடையார்பாளையம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இப்பயிற்சியை கணினி விவர பதிவாளர்கள் ஜெயங்கொண்டம் சாந்தி, தா.பழூர் யோகலெட்சுமி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் அந்தோணிலூர்து சேவியர் ஆகியோர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். பயிற்சியில் 152 உயர், தொடக்கநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : beginners ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா