×

தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பொதுமக்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அறிவுரை

திருப்பூர், அக். 23:  தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் இருந்து சொந்த ஊர்ருக்கு செல்லும் மக்கள் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும்போது பாதுகாப்பாக வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்களில் தென்மாவட்டங்களை ேசர்ந்த மக்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை பெரும்பாலும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி பண்டிகையொட்டி தென்மாவட்ட தொழிலாளர்கள் வரும் 25ம் தேதி முதல் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு செல்ல துவங்குவார்கள்.
இவர்கள் தங்களுடைய வீடுகளை பூட்டி விட்டு செல்லும்போது ஒரு சில வீடுகளில் திருட்டுச்சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க தங்களுடைய வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், தங்க நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துச்செல்லவும், தங்களுக்கு நம்பிக்கை உரிய நபர்களிடம் கொடுத்துச்செல்லுமாறும் பொது மக்களுக்கு திருப்பூர் மாநகர், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காகவும், இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு கூடுதல் போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : keeping ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...