×

மாவட்ட கோ-கோ போட்டியில் பி.சி.ஆர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

காரிமங்கலம், அக்.23:  காரிமங்கலம் பி.சி.ஆர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டேன்லி மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான கோ- கோ போட்டி நடந்தது. இதில், காரிமங்கலம் பி.சி.ஆர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் பி.சி.ஆர் மனோகரன், நிர்வாக இயக்குநர் தினேஷ், முதல்வர் சுதாகர், நிர்வாக அலுவலர் சம்யுக்தா திலிப்குமார் மற்றும் மாணவிகள். ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : District Go-Go Competition ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்