×

மகரிஷி வித்யாமந்திர் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

அரூர், அக்.23: அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பப்ளிக் பள்ளி சார்பில், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முரளி தொடங்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் சந்தைமேடு, கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில், மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு கோஷம் எழுப்பினர். இதில் பள்ளி தாளாளர் இளங்கோவன், செயலாளர் சம்பத், முதல்வர் புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dengue awareness rally ,school ,Maharishi Vidyamandir ,
× RELATED சீமான், ஹரி நாடார் தரப்பிலிருந்து...