×

மனநலன் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், அக். 23: திருப்பூரில் செஞ்சோலை பவுண்டேஷன், கான்பிடன்ட்ஸ் விங்ஸ் ஆகியவை இணைந்து மனநல விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இந்த பேரணிக்கு திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சிபிளிப் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், மாநகர நகர் நல அலுவலர் பூபதி, நல்லசிவம் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநல விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார். இதில், டாக்டர்கள் பிரகதீஸ், ராஜ்குமார், பிரபுராம், சக்திவேல் உட்பட பல்வேறு பிரிவு டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி அலுவலகம் முதல் குமரன் கல்லூரி வரை நடந்தது. இதில், குமரன் கல்லுாரி மாணவிகள் பலர் கலந்துகொண்டு மனநலன் குறித்து விழிப்புணர்வு பதாதைகளை கையில் ஏந்தியபடி சென்று துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

Tags : Awareness rally ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில்...