×

திருவிளையாடல் சிவாஜி, நாகேஷ் பேசும் நகைச்சுவை உரையாடல் வடிவில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்-குரும்பலூர் பேரூராட்சி விநியோகம்

பெரம்பலூர் : கொரோனா தடுப்பூசி செலுத்த திருவிளையாடல் சினிமா படத்தில் சிவாஜி, நாகேஸ் பேசும் நகைச்சுவை உரையாடல் வடிவில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குரும்பலூர் பேரூராட்சி விநியோகம் செய்தது.கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவும்முறை, தாக்கத்தின் அறிகுறிகள், சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து குறும் படங்கள், டிஜிட்டல் பேனர்கள், போஸ்டர்கள், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் நூதன முறையில் திருவிளையாடல் சினிமாவிலுள்ள சிவாஜி-நாகேஸ் பங்கேற்ற பிரபல நகைச்சுவை உரையாடல் வடிவில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருவது மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக புகழ்பெற்று பட்டித்தொட்டியெல்லாம் ஒலிபெருக்கிகளில் கதை வசனமாக ஒலித்த திருவிளையாடல் சினிமாவில் சிவனாகவுள்ள சிவாஜியும், தருமியாக நடித்த நாகேசும் பேசிக்கொள்ளும் பிரபல வசனங்களை போல, தவிர்க்கக் கூடாதது- மாஸ்க்கும் சானி டைசரும், தவிர்க்க வேண்டியது- நெரிசலான கூட்டங்களையும், கூட்டம் சேர்ப்பதையும், பார்க்கக் கூடாதது-அச்சப்படுத்தும் வாட்ஸ்அப் மெசேஜ்களை, அச்சப்பட வேண்டியது- முகக்கவசம் அணியாதவர்களை பார்த்து, அச்சப்பட வேண்டாதது-கோவிட்-19 தடுப்பூசிக்கு, ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டியது- முன்களப்பணியாளர்களை என சுவாரஸ்யமாக உரையாடலை துண்டு பிரசுரங்களில், சிவாஜி, நாகேஸ் படங்களுடன் உரையாடுவதை போல அச்சடித்து பொதுமக்களுக்கு, வர்த்தக பிரமுகர்களுக்கு, பஸ் பயணிகளுக்கு வழங்கி வருகின்றனர். அதேபோல் திருமண பத்திரிக்கையை போல தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அவற்றை வாங்கிப்படித்த பலரும் திருவிளையாடல் பட வசனம்போல் இருப்பதையும், திருமண பத்திரிகையை போல் அச்சடித்து அழைப்பு விடுத்திருப்பதையும் பார்த்து முழுவதையும் படித்துப்புரிந்து கொள்ளுகின்றனர். நூதனமாக அச்சடித்து பொதுமக்களுக்கு விளங்கச்செய்த பேரூராட்சிக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் பாராட்டுகளைத்தெரிவித்து வருகிறனர்….

The post திருவிளையாடல் சிவாஜி, நாகேஷ் பேசும் நகைச்சுவை உரையாடல் வடிவில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்-குரும்பலூர் பேரூராட்சி விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Kurumbalur ,Pradesh ,Tiruviladal ,Shivaji ,Nagesh ,Nakez ,
× RELATED குரும்பலூர் செகுடப்பர் கோயில்...