×

உலக சிக்கன நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பேச்சு போட்டி

தர்மபுரி, அக்.23: உலக சிக்கன நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, நாடகம், நாட்டியப்போட்டிகள் நேற்று தர்மபுரியில் நடந்தது. உலக சிக்கன நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தி பேச்சு, கட்டுரை, நாடகம், நாட்டியப்போட்டிகள் நேற்று தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளை பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் வாசுதேவன் தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கு மோகன்குமார், முருகன், ஆர்த்தி, சரிதா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் 24ம் தேதி நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட உள்ளது.

Tags : State school talk competition ,World Austerity Day ,
× RELATED இன்று  (அக்.30) உலக சிக்கன தினம் இக்கணம், எக்கணம் தேவை சிக்கனம்