×

பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகி சரவணன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டிப்பது, தெலுங்கானாவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Tags : Rural Development Employees Union ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்