×

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கரூர், அக். 23: தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.2019- 20ம் கல்வியாண்டில் பிஇ, பிடெக், பிடிஎஸ், எம்பிபிஎஸ், பிஎட், பிபிஏ, பிசிஏ, பி பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, எல்எல்பி, எம்சிஏ, எம்பிஏ, பிவிஎஸ்சி, பிஎஸ்சி, அக்ரி, பிபிஎம், பிஎஸ்சி பயோடெக், பிஎப்எஸ்சி, பி ஆர்க் போன்ற ஏனைய பல தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதலாண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் ஆன்லைனில் அனுப்பி வைக்குமாறு டெல்லியில் உள்ள மைய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பிரதிமாதம் ரூ.3000. (ஆண்டுக்கு ரூ.36,000) வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பித்தினை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 2019- 20ம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமேயானது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.19 ஆகும்.எனவே தொழிற்கல்வி பயில்வதற்கு தங்களது மகன், மகள்களை சேர்த்துள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிகஅளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர், நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Descendants ,Veterans ,
× RELATED 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய...