×

கோத்தகிரி பஸ் நிலைய வளாகத்தில் மண்சரிவு

கோத்தகிரி, அக். 23: கோத்தகிரி பஸ் நிலையம் பின்புறம் நேற்று மதியம் மண் சரிவு ஏற்பட்டது. கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு பின்புறமுள்ள மண் திட்டு நேற்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் பாறைகளும் உருண்டு பஸ் நிலைய வளாகத்தில் விழுந்தது. அந்த சமயத்தில் அப்பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் ெபரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ெதாடர்ந்து மண் குவியல்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Landslide ,bus stand ,Kotagiri ,
× RELATED முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்