×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வுபெற்றோர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, அக். 23: மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாகவே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பின் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாகவே தொடர வேண்டும். ைவரவிழா ஆண்டை முன்னிட்டு 3 சதவீத உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2003க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகள், பணப்பட்டுவாடா, பென்சன் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். டி.சி.எல்., ஒப்பந்த பணி காலத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் கூட்டி வழங்கிட வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் குறைகள் அனைத்தும் உடனே தீர்த்து வைக்க வேண்டும். ஓய்வூதியர் தனிநபர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நீலகிரி கிளை சார்பில் ஊட்டி ரயில் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் வெள்ளகுட்டி தலைமை வகித்தார். சிஐடியு., மாநில செயலாளர் கோபிகுமார்  ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் மைக்கேல், சிஐடியு., மாவட்ட துணை தலைவர் ஆல்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,Electricity Pensioners ,Ooty ,
× RELATED ஆர்ப்பாட்டம்