×

மஞ்சூர்-ஊட்டி சாலையில் சீரமைப்பு பணிகள்

மஞ்சூர், அக்.23:  மஞ்சூர் ஊட்டி சாலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை ெபய்தது. நேற்று  கனமழை பெய்யும் என ரெட்  அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், நீலகிரியில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் நேற்று  மழை பெய்யவில்லை. இதனால், மக்கள் நிம்மதியடைந்தனர். பெய்து வரும் பலத்த  மழையில் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக மஞ்சூர் ஊட்டி சாலையில்  குந்தாபாலம், மெரிலேண்ட் மற்றும் எடக்காடு, முக்கிமலை, கேரிங்டன், கிண்ணக்கொரை,  கோரகுந்தா சாலைகளில் பெருமளவு மண்சரிவுகள் ஏற்பட்டதுடன் ஏராளமான மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குந்தாபாலம் ராமையா பிரிட்ஜ் அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், கற்கள் ரோட்டில் உருண்டு  விழுந்தன. கிண்ணக்கொரை அருகே ஏற்பட்ட நிலச்சரில் சாலையின் ஒரு பகுதி  துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை  சார்பில் சீரமைப்பு பணிகள் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

ரமைப்பு பணிகளில் 5 ேஜசிபி இயந்திரங்களுடன் ஏராளமான சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்  திவ்யா மஞ்சூர் ஊட்டி சாலையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.  இவருடன் நெடுஞ்சாலைதுறை கோட்டபொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர்  சாமியப்பன், உதவி பொறியாளர் பாலச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்,  தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். மெரிலேண்ட் பகுதியில் சாலை  துண்டிக்கப்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதை ஆய்வு செய்த அவர் குந்தா  பகுதியில் பாறைகள் உருண்டு கிடப்பதை பார்வையிட்டு கற்கள் மற்றும் பறைகளை பாதுகாப்பாக மாற்றும்படி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கூறினார். இதைத்தொடர்ந்து குந்தா மாரியம்மன் கோயில் அருகே குடியிருப்புகளை ஒட்டி மண்சரிவுகள் ஏற்பட்டதையும் கலெக்டர் ஆய்வு செய்து போக்குவரத்திற்கு பாதிப்பின்றி சீரமைப்பு பணிகளை  விரைவாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

Tags : Manjur-Ooty ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...