×

கோவை, திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை முடக்கம்

கோவை, அக்.23:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. இதில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வராக்கடன் வசூல் பணியை தீவிரப்படுத்தவேண்டும். வங்கிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனைக்கு தேவையில்லாத கட்டணம் பெறுவதை தவிர்க்கவேண்டும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைளை வலியுறுத்தி இன்று கோவை மாவட்டத்தில் 853 வங்கிகளில் பணியாற்றும் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக கோவை மாவட்ட அளவில், சுமார் 400 கோடி ரூபாய்க்கு வங்கி பரிவர்த்தனை நடக்கவில்லை.
கோரிக்கைைய வலியுறுத்தி கோைவ அவினாசி ரோட்டில் உள்ள ஓரியண்டல் வங்கி  முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பொதுத்துறை வங்கி இணைப்பிற்கு கண்டனம்  தெரிவித்து ேகாஷம் எழுப்பப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 450 வங்கிகளில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு வங்கி பரிவர்த்தனை முடங்கியது. ஆக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய்க்கு வங்கி பண பரிவர்த்தனை முடங்கியது.அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. புதிய தலைமுறை தனியார் வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள் போராட்டத்தில் பங்கேற்றது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வங்கிகள் திறந்திருந்தது. ஆனால் ஊழியர்கள் இல்லாததால் வங்கி பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் வங்கிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2,700 ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை தடையின்றி நடந்தது. இன்று முதல் வங்கி பணிகள் வழக்கம் போல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bank employees ,strike ,Coimbatore ,Tirupur ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்