×

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உத்தரவு

கோவை, அக்.23:  கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி. 3 நகராட்சி, 37 பேரூராட்சி, 225 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. உள்ளாட்சி பகுதிகளில் வார்டு மறுவரையறை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல வார்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தும்போது பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும், உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணிக்கு பிறகு எதாவது குளறுபடி இருக்கிறதா? என ஆய்வு நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதி வார்டில் மலை கிராம பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கே தேர்தல் நடத்தும்போது இட ஒதுக்கீடு அடிப்படையை முறையாக கடைபிடிக்கவேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எலக்ட்ரானிக் ஓட்டு மெஷின்களும், இதர பகுதிகளில் ஓட்டு சீட்டு முறையிலும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. தேர்தலுக்காக ஓட்டுச்சாவடிகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்திய ஓட்டுச்சாவடிகளை காட்டிலும் கூடுதலாக ஓட்டுச்சாவடிகள் ேதவைப்படும். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைமுறையில் அதிகளவு மாற்றங்கள் இருக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் அமலாக்கப்படும்.

தேர்தல் பணியில் அதிகாரிகள் கவனமாக இருக்கவேண்டும். கிராமம், நகரில் பதட்ட பகுதிகளை கண்டறியவேண்டும். பதட்டமான ஏரியாக்களில் ஓட்டுப்பதிவு நடக்கும்போது தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்யவேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் முறையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதா? என கண்டறியவேண்டும். பட்டியலில் இல்லாதவர்கள் பெயரை நீக்கம் செய்யவேண்டும். வாக்காளர் பட்டியல் குழப்பம் இல்லாத வகையில் இருக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...